சாதனைகள்

குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.

இதில் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். இதையொட்டி பெண்கள் பள்ளி வளாகத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு, தலைமையாசிரியை சாந்தி தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு, பாராட்டு சான்றிதழ்களை சட்டப்பேரவை உறுப்பினர் என். அசோக்குமார் வழங்கி, வாழ்த்திப் பேசினார்.

பேராவூரணி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் மேலோர் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். இதன் மூலம் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

போட்டியில் வென்ற மாணவிகளை வெள்ளிக்கிழமை பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தி, உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன். உடற்கல்வி ஆசிரியர்கள் ரெங்கேஸ்வரி, அன்னமேரி, நீலகண்டன். பயிற்சியாளர் மற்றும் மாநில நடுவர் பாரதிதாசன். ஆசிரியர் அலுவலர்கள், பெற்றோர்கள். பள்ளி, மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

தடகளப் போட்டியில் எமது மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

பேராவூரணி பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் தடகளப்போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சுகன்யா, 800 மீட்டரில் மாயா, 400 மீட்டரில் நிஷா, வட்டு எறிதலில் ஆதித்யா, நீளம் தாண்டுதலில் ருத்ரன், வைசிகா, குண்டு எறிதலில் ஹர்சித் ஆகியோர் தங்கப்பதக்கமும், வட்டு எறிதலில் கீர்த்தனா, 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்-பந்தயத்தில் துரைக்கண்ணன், 200 மீட்டரில் யஷ்வந்தன் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், நீளம் தாண்டு-தலில் கிரிதரன், வட்டு எறிதலில் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் வெங்கலப்-பதக்கமும் பெற்றுள்ளனர். சாதனை புரிந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் நீலகண்டன், தலைமை பயிற்சி உடற்கல்வி ஆசிரியர் சுப்பிரமணியன், பயிற்சியாளர்கள் லெட்சு-மணன், விக்னேஷ், நடேச-குகன், சுகன்யா, முரளி, கார்த்திக் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று நடைபெற்ற தஞ்சை மாவட்டம் சப்ஜுனியர்பொறுக்குத்தேர்வில் நம்பள்ளி மாணவிகள் பிரணிதா P. லாவன்யா.N. இருவரும் தேர்வாகி உள்ளனர்.... வருகின்றன 27.12.2022 முதல் 30.12.2022 வரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் 32வது சப்ஜுனியர் கபாடி போட்டிக்கு 03.12.2022 அன்று சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பொறுக்குதேர்வுக்கு தஞ்சை மாவட்டம் சார்பாக கலந்து கொள்ள உள்ளனர்...